Log in
     
முதலமைச்சர் கிண்ண சதுரங்கப்போட்டி PDF  | Print |  E-mail
Written by Administrator   

வட மாகாண முதலமைச்சர் கிண்ண சதுரங்கப்போட்டியின் கிளிநொச்சி வலய

மட்ட வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10-12-2015) மு.. 10.00

மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி மண்டபத்தில்

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு .முருகவேல் தலைமையில்

நடைபெற்றது.

 

தலைமையுரையினைத்தொடர்ந்து உடற்கல்வி

பாடஉதவிக்கல்விப்பணிப்பாளர் பி.விஷ்ணு , கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச்சங்கத்

தலைவர் தி.சிவரூபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில்

பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், பொறியியலாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள்,

ஆசிரிய ஆலோசகர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிளிநொச்சி மாவட்ட

சதுரங்கச்சங்கத்தினர் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற

மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் வெற்றிச்சான்றிதழ்களையும் வழங்கி

கௌரவித்தனர் . இந்நிகழ்வில் கிளிநொச்சி வலயமட்டப்போட்டியில் ஒவ்வொரு

பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற சதுரங்க வீர வீராங்கணைகளும்

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய கோட்டமட்டப் போட்டிகளில் ஒவ்வொரு

பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற சதுரங்க வீர வீராங்கணைகளும்

வெற்றிக்கிண்ணங்களும் , வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கிக்

கௌரவிக்கப்பட்டனர்.

 

 


 

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: cURL error 6: Couldn't resolve host 'www.referd.info'

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates