Log in
     
அறிமுகம் PDF  | Print |  E-mail

அறிமுகம்

சதுர் சக அங்கம் = சதுரங்கம் Chess / Schach

சதுரங்கம் என்பது ஒரு விளையாட்டாக மட்டுமின்றி கலையாகவும் அறிவியலாகவும் கொள்ளப்படுகிறது. சதுரங்கம் விளையாடுவதற்கு முக்கிய மூலதனம் மூளையே ஆகும். அத்துடன் மதியூகமும் தந்திரமும் பயன்படுத்தப்பட வேண்டியவை.

 

இவ் விளையாட்டை விளையாடும் ஒருவனது மூளையின் பல பகுதிகள் விருத்தியடைய ஆரம்பிக்கின்றன. புதிய கலங்களை உருவாக்குகிறது. அதன் மூலம் விரிவான அறிவைப் பெறுகின்றான். சிந்தனைவாதியாக அறிவாளியாகத் தன்னை மாற்றுகின்றான். பல தரப்பட்ட ஆற்றல்களைப் பெறுகின்றான்.

 

வளர்க்கப்படும் ஆற்றல்கள்
தன்னம்பிக்கை Self Confidence Selbstvertrauen
ஞாபகசக்தி Memory Gedächtnis
கவனித்தல் Observation Beobachtung
விரைவு Quickness Schnelligkeit
துல்;லியம் Accuracy Genauigkeit
ஆக்கத்திறன் Creativity Kreativ
புரிந்துகொள்ளல் Understanding Verstehen
ஒருமுகப்படுத்தப்படுத்தல் Concentration Konzentration

 


 

சதுரங்கப்பலகை


32 வெள்ளை நிறச் சதுரங்களையும் 32 கறுப்புநிறச் சதுரங்களையும் 8 நிரைகளிலும் 8 நிரல்களிலும் (8x8=64) கொண்டது. ஒவ்வொரு சதுரமும் அதற்குரிய குறியீட்டுப் பெயரைக் கொண்டு அழைக்கப்படும். பலகையில் மொத்தம் 32 காய்கள் (16 வெள்ளை 16 கறுப்பு) காணப்படும்.

8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8 (கீழிருந்து மேலாக) 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a,1) இரண்டாவது சதுரம் (a, 2)என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும்

 

சதுரங்க காய்கள்

அரசன்

அரசி

யானை

தேர்

குதிரை

படைவீரன்

காலாட்படை Pawn / Bauer

யானைப்படை Castle or Rook(R) / Turm(T)

குதிரைப்படை Knight(N) / Springer (S)

தேர்;ப்படை Bishop(B) / Läufer(L)

அரசி Queen(Q) / Dame (D)

அரசன் King(K) / König (K)

சதுரங்கம் இருவரால் விளையாடப்படும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம்.

பலகையின் ஆரம்பநிலையும் காய்களின் நகர்வும்

பலகையில் எப்பொழுதும் இடது பக்கம் கறுப்புச் சதுரம் இருக்க வேண்டும்.

வெள்ளைச் சதுரத்தில் வெள்ளை அரசியும் கறுப்புச் சதுரத்தில் கறுப்பு அரசியும் இருப்பார்கள்.

ஆரம்ப நகர்த்தலை வெள்ளையே செய்ய வேண்டும்.

 

முதல் நகர்;வாக விரும்பினால் எந்த Pawn/Bauer ஐயும் எந்தச் சந்தர்ப்பபத்திலும் ஆரம்ப நிலையிலிருந்து முன்னோக்கி இரு சதுரங்களுக்கு நகர்த்தலாம்.

ஒவ்வொரு காய்களுக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட நகர்வு இருக்கிறது.

ஒரு காயை ஒருவர்; தொட்டால் அதனை நகர்;த்தும் சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் அவர்; அதனை நகர்;த்தியேயாக வேண்டும்.

பலகையில் காய்களை சரி செய்வதற்காக மாத்திரம் தொடுவதாக இருந்தால் j'adoube“ என்று சொல்ல வேண்டும். (இது ஒரு பிரெஞ்சு மொழிச் சொல்)

 

Castling / Rochade அனுமதிக்கப்படாத சந்தர்ப்பங்கள்

King / König அல்லது Rook / Turm ஏற்கனவே நகர்த்தப்பட்டிருந்தால்

King / König இற்கும் Rook / Turm இற்கும் இடையே எந்தக் காய்களும் இருக்கும் நிலையில்

King/König Check இல் இருக்கும்போது அல்லது நகரும் வரிசையில் தாக்கப்படும் நிலையிலிருந்தால்

 

En passant (இது ஒரு பிரெஞ்சு மொழிச் சொல்)

Pawn / Bauer இரு நகர்வுகளைச் செய்யும்போது எதிராக விளையாடுபவர். அதனை தனது Pawn / Bauer ஆல் வெட்டலாம், அல்லது வெட்டாமலும் வேறு நகர்வைச் செய்யலாம்.

 

Pawn / Bauer மாற்றமடைதல்

Pawn / Bauer எதிரியின் ஆரம்ப நிலையை அடையும்போது விரும்பிய காயைத் தெரிவு செய்யலாம். (பலகையில் பல Oueen / Damen இருக்கலாம்.)

 

கட்டாய நகர்வு

ஒருவர் தனக்கான நகர்வு வரும் சந்தர்ப்பத்தில் கட்டாயம் நகர்வைச் செய்ய வேண்டும்.

 

Zugszwang

குறிப்பிட்ட நகர்வைத் தவிர வேறு ஏதும் இல்லை

 

வெற்றி தோல்வியின்றி முடிவடையக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

 

  • போட்டியாளர் இருவரும் ஒத்துக் கொள்வதன் மூலம்

  • Stalemate/Patt சாத்தியமான நகர்;வற்ற நிலை

  • குறிப்பிட்ட காய்கள் மாத்திரம் பலகையில் மிஞ்சும் போது

  • 50 நகர்வுகளின் போது எக் காய்களும் வெட்டப்படாத நிலையிலும் Pawn/Bauer நகர்த்தப்படாத நிலையிலும்

  • இருவரும் 3 தடவைகள் ஒரே நகர்வைச் செய்யும் போது

 

 

- போட்டிகளின் போது ஒவ்வொரு நகர்வும் எழுதப்பட வேண்டும்.

- ஒவ்வொரு நகர்வின் பின்பும் தனது மணிக்கூட்டின் அழுத்தியை அழுத்தல் வேண்டும்.

 

கட்டாய நகர்;வு

ஒருவர்; தனக்கான நகர்;வு வரும் சந்தர்ப்பத்தில் கட்டாயம் நகர்;வைச் செய்ய வேண்டும்.

 

நகர்;வின் தரத்தைக் காட்டும் குறியீடுகள்

! சிறந்த நகர்வு

!! ஒரு அதி சிறந்த நகர்வு

? அனுகூலமற்ற நகர்வு

?? மிக அனுகூலமற்ற நகர்வு

!? அவதானிக்க வேண்டிய நகர்வு

?! கேள்விக்குரிய / சந்தேகத்துக்கிடமான நகர்வு

 

நகர்;வு நிலைக் குறியீடுகள்

 

x Capture / schlagen கைப்பற்றல்

= Draw / unentschieden (Remis) சமன்

+ Check / Schach அரசன் முற்றுகையில்

# Mate / Matt அரசன் கைப்பற்றப்படுதல்

0-0 Short Castling / Kurzrochade சிறிய கோட்டை மாற்றம்

0-0-0 Long Castling / Langrochade பெரிய கோட்டை மாற்றம்

 

 

 

வெற்றி (1)

- எதிரி தன் தோல்வியை எமக்கு அறிவிப்பதன்; மூலம்.

- எதிரி அரசனை நாம் கைப்பற்றுவதன் மூலம்.

 

தோல்வி (0)

- எதிரிக்கு எம் தோல்வியை அறிவிப்பதன் மூலம் .

- எமது அரசனை எதிரி கைப்பற்றுவதன் மூலம்

 

வெற்றி தோல்வியின்றிய முடிவு (½)

  1. போட்டியாளர் இருவரும் ஒத்துக் கொள்வதன் மூலம்

  2. குறிப்பிட்ட காய்கள் மாத்திரம் பலகையில் மிஞ்சும் போது

  3. Stalemate/Patt

  4. ஒரே நிலைமை 3 தடவைகள் மீண்டும் காணப்படும்போது

  5. 50 நகர்வுகளின் போது எந்த Pawn/Bauerம் நகர்த்தப்படாத நிலையில் அல்லது எந்தக் காய்களும் வெட்டப்படாத நிலையில்

 

நகர்வைச் செய்யும் முறை

ஒவ்வொரு நகர்வும் ஒரு கையால் மாத்திரம் செய்யப்பட வேண்டும்.

ஒருவர் தனது காயைத் தொட்டால் அது விதிமுறைப்படி நகரக்கூடியதாக இருந்தால் அதனையே நகர்த்த வேண்டும்.

எதிரியின் காயை முதலில் தொட்டால் அதனைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தால் அதனைக் கைப்பற்றியே ஆகவேண்டும்.

காய்களைச் சரிசெய்வதற்காக மாத்திரம் தொட்டால் j’adoube” என்று சொல்ல வேண்டும். அதன் அர்த்தம் திருத்தம் செய்கின்றேன் என்பதாகும்.

Castling/Rochade இன்போது முதலில் King/König ஐத் தொட வேண்டும். Rook/Turm ஐத் தொட்டால் அதனையே நகர்த்த வேண்டும்.

ஆரம்பத்தில் காய்கள் பிழையாக அடுக்கப்பட்டிருந்தால் மீண்டும் சரியாக அடுக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து விளையாடப்பட வேண்டும்.

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

CATS' Advertisement

ad

Monthly Video

ERROR: cURL error 6: Couldn't resolve host 'www.referd.info'

Copyrights@CATS TamilChess

Website counter

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates