Kilinochchi Chess Tornament 2016 Print
Written by Singam Kandiah   
Wednesday, 20 January 2016 21:24
கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் நடத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டியின் பரிசில் வழங்கல் நிகழ்வு இன்று (31-01-2016) பி.ப 3.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. நினைவு வெற்றிக்கிண்ணங்களுக்கான அமர்ர்களின் உருவப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் நினைவுச்சுடரேற்றினர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த. குருகுலராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க. முருகவேல்  அவர்களும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேற்றும் இன்றும் (30,31 ம் திகதிகளில் )நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இப்பரிசில் வழங்கல் நடைபெற்றது.
9 வயது, 11 வயது ,13 வயது 15 வயது, 17வயது, 19 வயது, 19 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக  பதின்நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்களைப்பெற்றவர்களுக்கென 140 பேருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
9வயது, 11வயது பிரிவுகளில் 1ம்இடம்பெற்றவருக்கு 2500/- வும் , 2 ம் இடம்பெற்றவருக்கு 1500/- வும் , 3 ம்    இடம்பெற்றவருக்கு1000/- வும்
ஏனைய வயதுப் பிரிவுகளில் 1ம் இடம்பெற்றவருக்கு 5000/- வும் 2ம் இடம்பெற்றவருக்கு 3000/- வும் 3 ம் இடம்பெற்றவருக்கு 2000/- வும் பணப் பரிசில்களாக வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் இடம்பெற்றவர்களுக்கு  பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
முதல் 10 இடங்களைப் இடம்பெற்றவர்களுக்கு    வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
போட்டியின் சகல சுற்றுக்களிலும் முழுமையாகப் பங்குபற்றுபவர்களுக்கு பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசில்களை பிரதம விருந்தினர் , சிறப்பு விருந்தினர் ஆகியோரும் பூநகரிக்கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம், கிளிநொச்சிக் கல்வி வலய உடற்கல்விப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் பி.விஷ்ணு, கிளிநொச்சிக் கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் செயற்திட்டத்தின் இணைப்பாளர் ப.ச்சிரதன், கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் , உருத்திரபுரம் மகா வித்தியாலய அதிபர் திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் , கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி இ.கிருஷ்ணலிங்கம், மற்றும் சதுரங்கச்சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டி இன்று (30-01-2016) ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி வரயக்கல்விப்பணிப்பாளர் . முருகவேல் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறும் இப்போட்டியானது இன்றும்(30ம் திகதி) நாளையும் (31ம் திகதி) நடைபெறவுள்ளது.

9 வயது, 11 வயது ,13 வயது 15 வயது, 17வயது, 19 வயது, 19 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக பதின்நான்கு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்று வருகின்றது.

இப்போட்டியில் 400 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், வெளிநபர்களும் பங்குகொண்டனர்.

நாளை 31 ம் திகதி பி. 2.30 மணிக்கு இப்போட்டிக்கான பரிசில் வழங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் . குருகுலராஜா கலந்துகொள்ளவுள்ளார்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசில்களும், பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

9வயது, 11வயது பிரிவுகளில் 1ம்இடம்பெறுபவருக்கு 2500/- வும் , 2 ம் இடம்பெறுபவருக்கு 1500/- வும் , 3 ம் இடம்பெறுபவருக்கு 1000/- வும்

ஏனைய வயதுப் பிரிவுகளில் 1ம் இடம்பெறுபவருக்கு5000/- வும் 2ம் இடம்பெறுபவருக்கு 3000/- வும் 3 ம் இடம்பெறுபவருக்கு 2000/- வும் பணப் பரிசில்களாக வழங்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்படும்.

முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

போட்டியின் சகல சுற்றுக்களிலும் முழுமையாகப் பங்குபற்றுபவர்களுக்கு பங்குபற்றுனர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

 

 


 

 

 

Last Updated on Monday, 22 February 2016 08:14