கிளிநொச்சியில் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் போட்டிகள் Print
Written by Administrator   
Monday, 22 February 2016 07:56

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள்.

இலங்கைப் பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் 2016 ம் ஆண்டுக்கான தனியாள் சதுரங்கப் போட்டிகளின் மாவட்ட மட்டப் போட்டிகள் முதல் முறையாக கிளிநொச்சியில் நடைபெற்றது.

 

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இப் போட்டிகள் நடைபெற்றன.

20ம், 21ம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டிகள் 7 வயதின் கீழ், 9 வயதின் கீழ், 11 வயதின் கீழ், 13 வயதின் கீழ், 15 வயதின் கீழ், 17 வயதின் கீழ், என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக நடைபெற்றன.

இப்போட்டிகளில் 400 வரையிலான மாணவர்கள் பங்குபற்றினர்

15, 17 வயதுப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும், குறித்த பிரிவுகளில் போட்டிகளில் பங்குபற்றும் 6 மாணவர்களுக்கு ஒருவர் வீதமும் என 17 மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

7, 9, 11, 13 வயதுப்பிரிவுகளில் மூன்று நட்சத்திர அடைவுகளுக்கு மேல் பெற்ற 42 மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் இத் தனிநபர் சதுரங்கப்போட்டிகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.

இவ் ஆண்டு முதல் முறையாக கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டு தேசிய மட்டப்போட்டிக்கு 59 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Last Updated on Monday, 22 February 2016 08:12